/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
காட்சிப்பொருளாக காய்ந்து போன தண்ணீர் தொட்டிகள்
/
காட்சிப்பொருளாக காய்ந்து போன தண்ணீர் தொட்டிகள்
ADDED : ஜூலை 31, 2025 03:10 AM

சோழவந்தான் : 'சோழவந்தான் அருகே சி.புதுாரில் தண்ணீர் தொட்டி முறையாக பராமரிக்கப்படாததால்பயன்படாமல் உள்ளது' என அப்பகுதியினர் வேதனை தெரிவித்தனர்.
அப்பகுதியைச் சேர்ந்த வேலாயுதம் கூறியதாவது: எங்கள் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். ஊராட்சி மன்றம் அருகே, மந்தை ஊரணி எதிரே, மீனாட்சிபுரம் செல்லும் பாதையில் என 3 இடங்களில் தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டது.
ஊராட்சி மன்றம் அருகே உள்ள தொட்டி பல ஆண்டுகளாகவும், மீனாட்சிபுரம் வழியில் உள்ள தொட்டி பல மாதங்களாகவும், மந்தை ஊரணி எதிரே உள்ள தொட்டி சில வாரங்களாகவும் செயல் படவில்லை.
ஊருக்குள் இருந்த அடிகுழாய்களும் செயல்படாமல் உள்ளது. குடிநீருக்காக ஊராட்சி குழாயில் வரும் தண்ணீரை மக்கள் பயன்படுத்துவர். குடிநீர் அளவோடு வருவதால் இதர தேவை களுக்கு தண்ணீர் தொட்டியை நம்பியுள்ளனர். தற்போது தொட்டிகளும், அடிகுழாயும் செயல்படாததால் அவசரத் தேவைக்கு தண்ணீரின்றி மக்கள் மிகுந்த சிரமப்படு கின்றனர். அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்றார்.

