ADDED : அக் 12, 2025 04:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார் : மேலுாரில் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணியின் போது ஏற்பட்ட குழாய் உடைப்பால் சுத்தமில்லாத தண்ணீரை விநியோகித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலுார் - - அழகர்கோவில் ரோட்டில் குடியிருப்புகள், மருத்துவமனை, பள்ளி, கடைகளுக்கு நகராட்சி சார்பில் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
5 நாட்களுக்கு முன் கழிவுநீர் கால்வாய் கட்டுவதற்காக பள்ளம் தோண்டப்பட்ட போது குடிநீர் குழாய்கள் உடைக்கப்பட்டதால் குடிநீர் வீணாகி வருகிறது.
அப்பகுதி மக்கள் கூறியதாவது: 5 நாட்களாக குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குழாய்களில் செம்மண் கலந்து சுத்தம் இல்லாமல் வரும் தண்ணீரை எப்படி பயன்படுத்தவது. நகராட்சி அதிகாரிகளிடம் கூறியும் சரி செய்யவில்லை. நகராட்சி நிர்வாகம் குழாய் உடைப்புகளை சரி செய்து சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என்றனர்.