ADDED : பிப் 10, 2025 04:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் மண்டலம் 2 வார்டு எண் 23ல் குழாய்கள் மாற்றி அமைக்கும் பணிகள் நடக்க உள்ளதால் பிப். 12, 13 ல் குடிநீர் நிறுத்தம் செய்யப்படுவதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.
தாகூர் நகர் சந்திப்பு - குலமங்கலம் மெயின் ரோட்டில் பொதுப்பணித்துறை மூலமாக செல்லுார் கண்மாயில் இருந்து உபரிநீர் செல்ல புதிதாக கால்வாய் கட்டும் பணிகள் நடக்கிறது. இதில் வைகை வடகரை முழுவதும் குடிநீர் செல்லும் பிரதான குழாய்களை மாற்றி அமைக்கும் பணிகள் நடக்க உள்ளதால்வார்டு எண் 21 முதல் 35 வரை, வார்டு எண்கள் 10,12,14 முதல் 17வரை உள்ள பகுதிகளில் மேற்கண்ட 2 நாட்களும் குடிநீர் நிறுத்தம் செய்யப்படும். அத்தியாவசிய பகுதிகளில் லாரி மூலம் குடிநீர் விநியோகிக்கப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

