தாழ்ந்து செல்லும் மின்கம்பிகள் சாய்ந்து நிற்கும் கம்பங்கள்
தாழ்ந்து செல்லும் மின்கம்பிகள் சாய்ந்து நிற்கும் கம்பங்கள்
ADDED : ஆக 28, 2026 05:32 PM
சோழவந்தான்: சோழவந்தானில் தாழ்ந்து செல்லும் மின் கம்பிகள், சாய்ந்து நிற்கும் கம்பங்களால் விபத்து அபாயம் உள்ளது.
இங்கு சோலைநகர் நாகா அவென்யூ பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இதனருகே மின்கம்பிகள் தரையில் இருந்து 1 மீ., என்ற அளவில் தாழ்ந்து செல்கின்றன. பல கம்பங்கள் சாய்ந்து விழும் நிலையில் உள்ளன.
இங்கு தினமும் விவசாய பணிகள், மாடு மேய்ச்சல் பணிகளுக்காக விவசாயிகள் செல்கின்றனர். மாலையில் ஏராளமான சிறுவர்கள் விளையாடுகின்றனர். தாழ்ந்த கம்பிகள், சாய்ந்த கம்பங்களால் விபத்து ஏற்பட்டு விபரீதம் விளைய வாய்ப்புள்ளது. மின்வாரியத்தினர் உடனே நடவடிக்கை எடுத்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட கம்பிகளே இப்பகுதியில் செல்கின்றன. இதனால் விபத்து ஏற்பட வாய்ப்பு இல்லை. அந்த கம்பிகளையும், கம்பங்களையும் விரைவில் சரி செய்ய உள்ளோம்’’ என்றனர்.
