தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ தொடர் மின்வெட்டு நோயாளிகள் அவதி

தொடர் மின்வெட்டு நோயாளிகள் அவதி

தொடர் மின்வெட்டு நோயாளிகள் அவதி


ADDED : ஆக 28, 2026 05:40 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 28, 2026 05:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் அரசு ஆஸ்பத்திரியில் தொடர் மின்வெட்டால் நோயாளிகள் அவதியுறுகின்றனர்.

அங்கு தினமும் நுாற்றுக்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். கணிசமான அளவில் உள் நோயாளிகளும் சிகிச்சை பெறுகின்றனர். அவர்களுடன் உறவினர்களும் சிலர் தங்கியுள்ளனர். க்ஷ

இப்பகுதியில் பகல், இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. ஜெனரேட்டர் வசதி இல்லாததால் நோயாளிகள் இருளில் அவதிப்படுகின்றனர். இரவு நேரங்களில் அலைபேசி வெளிச்சத்தை பயன்படுத்தி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அவலமும் உள்ளது. நோயாளிகளுடன் தங்கும் பார்வையாளர்களும் சிரமப்படுகின்றனர்.‌

அரசு மருத்துவமனையில் ஜெனரேட்டர் வசதி ஏற்படுத்தி தடையின்றி மருத்துவ சேவை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்துறை அமைச்சர் தொகுதியின் அரசு ஆஸ்பத்திரியில் மின்வெட்டு ஏற்படுவதும், அங்கு ஜெனரேட்டர் வசதி இல்லாததும் வேதனை அளிப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us