ADDED : அக் 04, 2025 03:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: திருவேடகம் விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ்., சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
இங்கு நடக்கும் என்.எஸ்.எஸ்., சிறப்பு முகாமில் ஒருபகுதியாக தச்சம்பத்து, திருவேடகத்தில் போதை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. எஸ்.ஐ அழகர்சாமி தொடங்கி வைத்தார். திருவேடகம் மேற்கு சதுர்வேத மஹா கணபதி கோயிலில் துவங்கி திருவேடகம் ஏடகநாதர் கோயிலில் நிறைவடைந்தது. போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். உதவித் தலைமை ஆசிரியர் அச்சுதலிங்கம், திட்ட அலுவலர் ராஜசேகர், உதவி திட்ட அலுவலர் பால்ராஜ், ஆசிரியர்கள் பன்னீர்செல்வம், முத்துமுருகன் கலந்து கொண்டனர்.