ADDED : செப் 30, 2026 04:48 AM

அ நிறம் | அளவு
மதுரை: மதுரையில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு அண்ணாமலையார் மெட்ரிக் பள்ளி சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு தொடர் நடைபயணம் நடந்தது.
சிறப்பு விருந்தினரான ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி குமரவேல் துவக்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளராக ஹானா ஜோசப் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு தலைமை மருத்துவர் ஜோசப் சஞ்சய் பங்கேற்றார். ராஜாக்கூர் விலக்கிலிருந்து தொடங்கிய இந்த விழிப்புணர்வு பயணம், கருப்பாயூரணி வழியாக அண்ணாமலையார் பள்ளி வளாகம் வந்தடைந்தது.
மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நடை பயணத்திற்கு ஆம்புலன்ஸ், முதலுதவி மற்றும் மருத்துவக்குழு சேவைகளை ஹானாஜோசப் மருத்துவமனையின் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி சேகர் ஏற்பாடு செய்திருந்தார்.
