ADDED : மார் 24, 2025 05:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: பேரையூர் பகுதியில் இரண்டு மாதங்களுக்கு முன் பருவ மழையால் முருங்கை மரத்தில் பூக்கள் உதிர்ந்து முருங்கை வரத்து நின்று விட்டது. தற்போது முருங்கைக்காய் சீசன் துவங்கி வரத்து அதிகமாக உள்ளதால் சைவ பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இப்பகுதியில் பெரும்பாலான வீடுகளில் முருங்கை மரங்கள் வளர்கின்றன. முருங்கைக்காய் மற்றும் கீரை மருத்துவ குணம் கொண்டுள்ளதால் அனைவரும் விரும்பி உண்பர். பெண்கள் கூறுகையில், ''சென்ற மாதம் கிலோ ரூ. 150 வரை விற்பனையானது. தற்போது விலை குறைந்து கிலோ ரூ. 20க்கு விற்கிறது. விலை குறைந்து விட்டதால் அதிகமாக வாங்கிச் செல்கிறோம் என்றனர்.