/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பீன்ஸ், பட்டாணியை சாய்த்த முருங்கைக்காய் நேற்று கிலோ ரூ.200க்கு விற்பனை

ADDED : நவ 28, 2024 05:34 AM
மதுரை: மலைப்பயிர்களான பீன்ஸ், பட்டாணிகளின் விலையை பின்னுக்கு தள்ளிய முருங்கைக்காய் நேற்று கிலோ ரூ.200க்கு விற்றது.
மழைப்பொழிவு, வரத்து குறைவான காலங்களில் தக்காளி, வெங்காயம் கூட கிலோ ரூ.150 ஐ தாண்டி விற்றதில்லை. ஆண்டுதோறும் கிலோ ரூ.100க்கு மேல் விற்கப்படும் பச்சை பட்டாணி, பட்டர்பீன்ஸ், சோயாபீன்ஸ் வகைகளும் தற்போது கிலோ ரூ.120 என்ற அளவில்தான் மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மொத்த மார்க்கெட்டில் விற்கப்படுகிறது.
ஆனால் உள்ளூர் வரத்தான முருங்கைக்காய் மட்டும் கிலோ ரூ.200 ஐ தாண்டி எகிறி பாய்கிறது. ஒரேவாரத்தில் 3 மடங்கு விலை அதிகரித்துள்ளது. தொடர் மழையால் வரத்து குறைந்ததோடு, காய்களின் தரமும் குறைந்ததால் விலை எகிறியுள்ளது.
கேரட் தரத்தைப் பொறுத்து கிலோ ரூ. 40 - ரூ.80 வரை, சோயா பீன்ஸ் 100, பட்டர் பீன்ஸ், பச்சை பட்டாணி 120, ஜெர்மன் பீன்ஸ் 50 - 60, கொடை மிளகாய், பஜ்ஜி மிளகாய் 50, சேனை, சேம்பு, உருளைக்கிழங்கு 60 விலைக்கு விற்றன. கருணைக் கிழங்கு கிலோ ரூ.90க்கு விற்கப்பட்டது.