/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தொழில் நுட்ப கோளாறால் பயணிகள் இன்றி கிளம்பிய துபாய் விமானம்
/
தொழில் நுட்ப கோளாறால் பயணிகள் இன்றி கிளம்பிய துபாய் விமானம்
தொழில் நுட்ப கோளாறால் பயணிகள் இன்றி கிளம்பிய துபாய் விமானம்
தொழில் நுட்ப கோளாறால் பயணிகள் இன்றி கிளம்பிய துபாய் விமானம்
ADDED : ஆக 28, 2025 11:37 PM
திருப்பரங்குன்றம்: மதுரையில் இருந்து துபாய் புறப்பட தயாரான ஸ்பைஸ் ஜெட் விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பயணிகளின்றி மாலை மும்பை சென்றது. பயணிகளுக்கான முழு கட்டணமும் திருப்பி வழங்கப்படும் என ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் உறுதி அளித்துள்ளது.
நேற்று அதிகாலை 5:00 மணியளவில் துபாயில் இருந்து புறப்பட வேண்டிய விமானம் காலை 6:40 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு காலை 9:50 மணிக்கு 100 பயணிகளுடன் மதுரை வந்தது.
பின் மீண்டும் இங்கிருந்து மதியம் 12:20 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் 130 பயணிகளுடன் மதியம் 1:00 மணிக்கு புறப்பட தயாராக ஓடுதள பாதைக்கு சென்றது. அப்போது தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டதால் மீண்டும் விமானநிலையத்திற்கு திரும்பியது.
பின் மாலை 4:50 மணிக்கு தொழில்நுட்ப கோளாறு தற்காலிகமாக சரி செய்யப்பட்டு பயணிகள் இல்லாமல் விமானம் மும்பை புறப்பட்டது. கோளாறை சரிசெய்யும் வசதிகள் மும்பையில் இருப்பதால் அங்கு கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
துபாய் செல்ல இருந்த பயணிகளுக்கான கட்டணம் திருப்பி வழங்கப்படும் என விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. கட்டணத்தை திரும்ப பெறாத பயணிகள் இன்று (ஆக.29) விமானத்தில் பயணிக்கலாம் எனவும் அந்நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.