ADDED : மே 29, 2025 01:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவனியாபுரம்: துபாயில் இருந்து மதுரைக்கு நேற்று மதியம்12:00 மணிக்கு வர வேண்டிய ஸ்பைஸ்ஜெட் விமானம் தாமதமானதால், அந்த விமானத்தில் துபாய் செல்ல வேண்டிய 178 பயணிகள் பயணத்தை ரத்து செய்தனர்.
துபாயிலிருந்து தினமும் கிளம்பும் ஸ்பைஸ்ஜெட் விமானம் மதியம் 12:00 மணிக்கு மதுரை வந்தடையும். அதே விமானம் மதுரையில் பயணிகளை ஏற்றிக்கொண்டு மதியம் 12:30 மணிக்கு புறப்பட்டு மதியம் 3:00 மணிக்கு துபாய் சென்றடையும்.
நேற்று துபாயில் இருந்து மதுரை வரவேண்டிய விமானம் மாலை 6:00 மணிக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் வரவில்லை. பின்பு இரவு 7:45 மணிக்கு வந்தது. அந்த விமானத்தில்மதுரையில் இருந்து துபாய்க்கு பயணிக்க வேண்டிய 178 பயணிகள்,விமானம் தாமதம் காரணமாக பயணத்தை ரத்து செய்துவிட்டு திரும்பிசென்றனர்.