ADDED : ஏப் 13, 2025 05:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : ம.தி.மு.க.,வின் தொழிற்சங்கமான, மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணியின் பொதுக்குழு, சென்னையில் நேற்று அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது.
பொதுச்செயலர் வைகோ தலைமையில் நடந்த பொதுக்குழுவில், அக்கட்சியின் எம்.பி., துரை பங்கேற்றார்.
அப்போது, தொழிலாளர் முன்னணியின் புதிய நிர்வாகிகள் நியமனத்தில் முறைகேடு நடந்ததாகவும், ஜாதி பார்த்து நிர்வாகிகள் நியமிக்கப்பட்டதாகவும் சிலர் குற்றம்சாட்டினர்.
இதனால் கூட்டத்தில் ஏற்பட்ட சலசலப்பு, ஒரு கட்டத்தில் மோதலாக மாறும் சூழல் ஏற்பட்டது.
அவர்களை துரை சமாதானப்படுத்த முயன்றும் முடியவில்லை, அதைத் தொடர்ந்து, கூட்டத்திலிருந்து அவர் கோபமாக வெளியேறினார்.

