UPDATED : அக் 03, 2025 06:21 AM
ADDED : அக் 03, 2025 01:32 AM

மதுரை: மதுரையில் தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் 117வது பிறந்த நாள் விழா அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பின் சார்பில் நடந்தது.
வழக்கறிஞர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் பி.கே.எம்.செல்லையா மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச அரிசி வழங்கினார். திருப்பரங்குன்றம் சுப்பிர மணிய சுவாமி கோயில் அறங்காவலர் சண்முகசுந்தரம், ஆடிட்டர் சேதுமாதவா முன்னிலை வகித்தனர். அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பின் நிறுவனர் நெல்லை பாலு ஏற்பாடு செய்தார்.
தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்டவர்
மதுரை எஸ்.எஸ்.காலனியில் தமிழ்நாடு பிராமணர் சங்கம் மதுரை நகர் கிளை சார்பில் நடந்த விழாவுக்கு தலைவர் கணபதி வரதசுப்பிரமணியன் தலைமை வகித்தார்.
தென்மண்டல தலைவர் அமுதன் பேசுகையில், ''தினமலர் நிறுவனர் தேசத்தையும், மொழியையும் இருகண்களாக நேசித்தவர். கன்னியாகுமரியை தமிழகத்துடன் இணைக்க முக்கியப் பங்கு வகித்தவர். எல்லா சமுதாயத்தினரும் வாழ்வில் உயர உதவியிருக்கிறார். அவரின் தலைமுறையினர் தினமலர் நாளிதழை தர்மத்தின் வழி புத்தாக்கத்துடன் நடத்தி வருகின்றனர்'' என்றார். ஓய்வுபெற்றவங்கி மேலாளர் சுந்தரராஜன் புத்தாடை வழங்கினார்.
மாவட்ட தலைவர் பக்தவத்சலம், பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன், பொருளாளர் கோதண்டராமன், நகர்க்கிளை பொருளாளர் சங்கர நாராயணன், பொதுச்செயலாளர் கோவிந்தராஜன், மாவட்ட இளைஞரணி செயலாளர் மீனாட்சி சுந்தரம் கலந்து கொண்டனர்.
கே.ஆர்.எஸ்., பள்ளி
மதுரை கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் (கே.ஆர்.எஸ்.,) சி.பி.எஸ்.இ., பள்ளியில் தினமலர் நிறுவனர் டி.வி. ராமசுப்பையர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.