தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ 'டிஸ்யூம்... டிஸ்யூம்...' மதுரை மாநகராட்சியின் சுகாதாரப்பிரிவில் அதிகாரிகளின் 'ஈகோ'வால் பணிகள் பாதிப்பு

 'டிஸ்யூம்... டிஸ்யூம்...' மதுரை மாநகராட்சியின் சுகாதாரப்பிரிவில் அதிகாரிகளின் 'ஈகோ'வால் பணிகள் பாதிப்பு

 'டிஸ்யூம்... டிஸ்யூம்...' மதுரை மாநகராட்சியின் சுகாதாரப்பிரிவில் அதிகாரிகளின் 'ஈகோ'வால் பணிகள் பாதிப்பு

2


ADDED : செப் 23, 2026 03:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 23, 2026 03:49 AM

2


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை,:மதுரை மாநகராட்சி சுகாதாரப் பிரிவில் அதிகாரிகளுக்குள் நடக்கும் 'ஈகோ' யுத்தத்தால் பணிகள் பாதிப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. நகரின் துாய்மை, மக்களின் ஆரோக்கியத்தை காக்கும் முக்கிய பொறுப்பு மாநகராட்சியின் சுகாதாரப் பிரிவுக்கு உண்டு. அன்றாடம் குப்பை அகற்றுவது முதல் மக்களை பாதிக்கும் நோய், கொசுத் தொல்லையில் இருந்து காத்து ஆரோக்கியம் பேணும் முக்கிய பணி இப்பிரிவுக்கு உண்டு.

இதுதவிர தெருவில் திரியும் மாடுகள், நாய்களை கட்டுப்படுத்துவது, பிறப்பு இறப்பு சான்றிதழ் வழங்கல் உள்ளிட்ட பிற பணிகளும் இப்பிரிவில் நடக்கின்றன. இங்கு முக்கிய உயர் அலுவலர்கள் இருவருக்கு இடையே நடக்கும் 'நீயா..நானா...' போட்டியால் இப்பிரிவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக சர்ச்சை எழுந்துள்ளது.

சவாலாகும் டெங்கு ஒழிப்பு

சுகாதாரப் பிரிவு ஊழியர்கள் கூறியதாவது: நகர்நல அலுவலர் (சி.எச்.ஓ.,) - உதவி நகர் நல அலுவலருக்கு (ஏ.சி.எச்.ஓ.,) இடையே போதிய ஒருங்கிணைப்பு இல்லை. இப்பிரிவு அலுவலர்கள், களப்பணியில் உள்ள எஸ்.ஐ.,க்கள், எஸ்.ஓ.,க்களும் இருவரின் ஆதரவாளர்களாக செயல்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த 'ஈகோ' யுத்தத்தால் நகரின் பல்வேறு இடங்களில் தொட்டிகளில் குப்பை நிறைந்து, ரோட்டில் சிதறி சுகாதாரக் கேடை ஏற்படுத்துகிறது. இதற்கு காரணம், குப்பையை அகற்றும் ஒப்பந்த நிறுவனத்தை இப்பிரிவு முறையாக வழிநடத்துவது இல்லை என புகார் எழுந்துள்ளது.

நகரில் தற்போது டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. வீடுகள் தோறும் சென்று 'அபேட்' மருந்து தெளித்து கொசுப் புழுக்களை ஒழிக்கும் பணி சவாலாக மாறியுள்ளது. கொசு ஒழிப்புக்கு பயன்படுத்தப்படும் பல உபகரணங்கள் பழுதாகி கிடக்கின்றன.

இதை சரிசெய்ய தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள் வருகை உள்ளிட்ட செயல்பாடுகள் கண்காணிப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.

டெங்கு பாதிப்பு ஒழிப்பு பணிகள் குறித்து கமிஷனர் கவுரவ் குமார் பல உத்தரவுகளை பிறப்பிக்கிறார். ஆனால் சுகாதாரப் பிரிவில் நீடிக்கும் இந்த 'பனிப்போரால்' அவரது உத்தரவும் முறையாக பின்பற்றப்படுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதவிர பிறப்பு இறப்பு சான்று, பிறப்பு சான்றிதழில் திருத்தம் கோரி விண்ணப்பித்தோர் 3 மாதங்களுக்கும் மேலாக சான்றிதழ் கிடைக்காமல் தவிக்கின்றனர். இதில் பள்ளி மாணவர்களும் அடங்குவர். இப்பிரச்னைகளுக்கு கமிஷனர் கவுரவ் குமார் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us