தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ இலவச தொழில் முனைவு பயிற்சி

 இலவச தொழில் முனைவு பயிற்சி

 இலவச தொழில் முனைவு பயிற்சி


ADDED : செப் 23, 2026 03:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 23, 2026 03:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை மாவட்ட தொழில் மையம் சார்பில் பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களுக்கான முறைப்படுத்தல் திட்ட (பி.எம். எப்.எம்.இ.,) பயனாளிகளுக்கான இலவச தொழில்முனைவு பயிற்சி செப். 24 முதல் 26 வரை நடக்கிறது.

உணவுத் துறையில் நவீன முன்னேற்றம், தொழில்துறை 4.0, டிஜிட்டல் மார்க்கெட்டிங், உணவுப் பாதுகாப்பு விதி, விற்பனை வாய்ப்புகள் குறித்து அழகர்கோவில் ரோட்டிலுள்ள மாவட்ட தொழில் மையத்தில் காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை பயிற்சி அளிக்கப்படும்.

தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (இ.டி.ஐ.ஐ., தமிழ்நாடு) ஏற்பாடுகளை செய்துள்ளது. மதிய உணவு வழங்கப்படும். பயிற்சியில் அரசு உதவித்தொகை ரூ.1250, மத்திய அரசு சான்றிதழ் வழங்கப்படும்.

பி.எம்.எப்.எம்.இ., திட்டத்திற்கான பதிவெண், ஆதார், வங்கிக் கணக்கு புத்தக நகல், பாஸ்போர்ட் போட்டோவுடன் வரவேண்டும்.

விவரங்களுக்கு மாவட்ட வள அலுவலரை 97915 41990ல் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us