ADDED : நவ 22, 2025 04:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் அருகே அய்யூர் மீனாட்சிபுரத்தில் இருந்து அ.கோவில்பட்டி வரை ரூ.1.20 கோடிக்கு தார் சாலை அமைக்க பூமி பூஜை நடந்தது. வெங்கடேசன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன், முத்தையன், அருண் விஜயன், நகர் செயலாளர் ரகுபதி முன்னிலை வகித்தனர். நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளர் கவுதம் வரவேற்றார்.
பேரூராட்சி தலைவர் ரேணுகா ஈஸ்வரி, துணைத்தலைவர் சாமிநாதன், மாணவரணி அமைப்பாளர் ஆதிசங்கர், மாவட்ட அணி நிர்வாகிகள் தவசதீஷ், பிரதாப் சந்தன கருப்பு, பாண்டி, பாலகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

