நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான் : சோழவந்தான் ஜெனகை நாராயண பெருமாள் கோயிலில் ரூ.1.52 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகளுக்கான பூமி பூஜை எம்.எல்.ஏ., வெங்கடேசன் தலைமையில் நடந்தது.
அர்ச்சகர் பார்த்தசாரதி தலைமையில் யாக பூஜை நடந்தது. பேரூராட்சி சேர்மன் ஜெயராமன், அறநிலையத்துறை ஆய்வாளர் ஜெயலட்சுமி, அறங்காவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிர்வாக அலுவலர் தாரணி, பணியாளர்கள் முரளிதரன், சிவசூர்யா ஏற்பாடுகளைச் செய்தனர்.