ADDED : டிச 06, 2025 05:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: சோழவந்தான் அருகே நகரி கல்வி இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியில் சென்னை ஐ.ஐ.டி., சார்பில் ஆன்லைன் பட்டப்படிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
சென்னை ஐ.ஐ.டி.,யில் நடந்து வரும் ஆன்லைன் பி.எஸ்., பட்டப் படிப்பு குறித்தும், இதனால் மாணவர்கள் பெறும் கல்வி, வேலை வாய்ப்புகள் குறித்தும் திட்டத்தலைவர் கமலா, மேலாளர் கோகிலா மாணவர்கள், பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பி.எஸ்., பட்டப் படிப்புக்கான தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அகிலன், ஹரிஷ், நரேஷ்பாலாஜி, சாகேத், கிஷோர்காந்த், விஜய் ஆலபன், கார்த்திக் குமார் பாராட்டப்பட்டனர். பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள் பலர் பங்கேற்றனர்.

