/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பதவி உயர்ந்தாச்சு; சம்பளம் இன்னும் வரல கல்வித்துறை கிளார்க்குகள் புலம்பல்
/
பதவி உயர்ந்தாச்சு; சம்பளம் இன்னும் வரல கல்வித்துறை கிளார்க்குகள் புலம்பல்
பதவி உயர்ந்தாச்சு; சம்பளம் இன்னும் வரல கல்வித்துறை கிளார்க்குகள் புலம்பல்
பதவி உயர்ந்தாச்சு; சம்பளம் இன்னும் வரல கல்வித்துறை கிளார்க்குகள் புலம்பல்
ADDED : அக் 23, 2025 04:12 AM
மதுரை: கல்வித்துறையில் பல ஆண்டுகளுக்கு பின் 167 ரிக்கார்டு கிளார்க்குகளுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டது. ஆனால் அதற்கான சம்பள உயர்வு 6 மாதங்களாக கிடைக்கவில்லை.
முதன்மை, மாவட்ட, வட்டாரக் கல்வி அலுவலகங்கள், அரசு பள்ளிகளில் 500க்கும் மேற்பட்ட ரிக்கார்டு கிளார்க்குகள் உள்ளனர். இவர்களுக்கு 20 ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்படவில்லை. ஏப்.,21ல் தகுதியுள்ள 167 பேருக்கு ரிக்கார்டு அசிஸ்ட்டெண்ட் பதவி உயர்வு அளிக்கப்பட்டது. இதனால் அடிப்படை சம்பளத்தில் அவர்களுக்கு ரூ.ஆயிரம் அதிகரிக்கும். பதவி உயர்வு பெற்றவர்களில் 108 பேருக்கு ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்., தளத்தில் பதவி ஐ.டி., பதிவேற்றம் செய்யும் பணியில் சிக்கல் நீடித்தது. இதை 6 மாதங்களாக சரி செய்யாததால் இதுவரை அவர்கள் பழைய சம்பளமே பெறும் சூழல் நீடிக்கிறது.
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் மாவட்ட இளைஞரணி செயலாளர் சரவணகுமார் கூறியதாவது: பதவி உயர்வு பெற்றதில் பலர் 10, 20 ஆண்டுகளாக பணியில் உள்ளனர். தற்போது தான் பதவி உயர்வு பலன் கிடைத்துள்ளது. அதற்கான சம்பளத்தை பெறமுடியவில்லை. அதிகாரிகளிடம் கேட்டால் ''அரியருடன்' சம்பளம் கிடைக்கும்' என்கின்றனர். ஓராண்டிற்குள் ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்., தளத்தில் பதவி ஐ.டி., மாற்றம் செய்யவில்லையென்றால் 'அரியர்' கிடைப்பதிலும் சிக்கல் என்கின்றனர். மாவட்ட, முதன்மை கல்வி அலுவலர் பதவி உயர்வுகளுக்கு சிக்கலும் ஏற்படுவதில்லை. எங்களுக்கு மட்டும் பிரச்னை உள்ளது. கல்வி இயக்குநர் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.