/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கல்விக் கொள்கை மாற்றங்களை சந்தித்துள்ளது: உயர்நீதிமன்றம் கருத்து
/
கல்விக் கொள்கை மாற்றங்களை சந்தித்துள்ளது: உயர்நீதிமன்றம் கருத்து
கல்விக் கொள்கை மாற்றங்களை சந்தித்துள்ளது: உயர்நீதிமன்றம் கருத்து
கல்விக் கொள்கை மாற்றங்களை சந்தித்துள்ளது: உயர்நீதிமன்றம் கருத்து
UPDATED : செப் 05, 2025 04:30 AM
ADDED : செப் 05, 2025 03:37 AM
மதுரை:அரசு பள்ளிகளுக்கு இணையாக ஆங்கில வழிக் கல்வியைத் தொடர உதவும் வகையில் அரசாணையின் பலன்களை உதவி பெறும் பள்ளிகளுக்கு நீட்டிக்க தாக்கலான வழக்கில்,' கல்விக் கொள்கை பல மாற்றங்களை சந்தித்துள்ளது. மனுவை மேலும் பரிசீலிக்கத் தேவையில்லை,' எனக்கூறி முடித்து வைத்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.
கன்னியாகுமரி மாவட்டம் விரலிவில்லை கனகராஜ் தாக்கல் செய்த மனு: அரசு பள்ளி மாணவர்கள் நலன் கருதி 2018ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
அதன் பலன்களை அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். இது உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அரசு பள்ளிகளுக்கு இணையாக ஆங்கில வழிக் கல்வியைத் தொடர உதவும். இதை வலியுறுத்தி தமிழக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர், பள்ளிக் கல்வித்துறை இயக்குனருக்கு 2019 ல் மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு பிறப்பித்த உத்தரவு: கல்விக் கொள்கை பல மாற்றங்களை சந்தித்துள்ளது. குழந்தைகளுக்கு சிறந்த கல்வியை வழங்க தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுதியுள்ளது. இதனால், இம்மனுவை மேலும் பரிசீலிக்கத் தேவையில்லை. வழக்கு முடித்து வைக்கப்படுகிறது.
இவ்வாறு உத்தர விட்டனர்.