ADDED : ஜூலை 29, 2025 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை நுகர்பொருள் அண்ட் ஷாப் மொத்த வியாபாரிகள் சங்கம் சார்பில் கல்வி விருது வழங்கும் விழா நடந்தது. தலைவர் மோகன் தலைமை வகித்தார். துணை தலைவர்கள் இளங்கோவன், கலைமணி, நடராஜன் முன்னிலை வகித்தனர். பொருளாளர் கதிரவன் வரவேற்றார்.
மாணவர்களுக்கு கல்வி விருதை சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ஜெயசிங் வழங்கினார். துணைச் செயலாளர்கள் ஜெயராஜ், வேல்முருகன், சோமசுந்தரம், தமிழ்ச்செல்வன், ராஜா பங்கேற்றனர். செயலாளர் மாரியப்பன் ஏற்பாடுகளை செய்திருந்தார். பொறுப்பாளர் ஜெய்சங்கர் நன்றி கூறினார்.