ADDED : ஜூலை 31, 2025 05:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி : உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி துவக்கப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள் விழா கொண்டாடப்பட்டது.
தலைமை ஆசிரியர் மதன்பிரபு வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக எம்.எல்.ஏ., அய்யப்பன், ரோட்டரி சங்க மூத்த நிர்வாகி ராஜேந்திரன் கலந்து கொண்டனர். காமராஜர் சாதனைகள் குறித்து கட்டுரை, பேச்சுப்போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினர்.