பிரீத்தி மருத்துவமனையில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கான கல்வி நிகழ்ச்சி
பிரீத்தி மருத்துவமனையில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கான கல்வி நிகழ்ச்சி
ADDED : ஆக 09, 2026 12:45 AM

மதுரை: மதுரை உத்தங்குடி பிரீத்தி மருத்துவமனையில் மேம்பட்ட மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கான 2 நாள் கல்வி நிகழ்ச்சி நேற்று துவங்கியது.
இந்நிகழ்வில் முழங்கால், இடுப்பு, தோள்பட்டை மூட்டு மாற்று அறுவை சிகிச்சை தொடர்பான நவீன தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. ரோபோட்டிக் உதவி யுடன் ஆர்த்ரோபிளாஸ்டி, எவிடென்ஸ் அடிப்படையிலான பயிற்சி உள்ளிட்ட நவீன சிகிச்சை முறைகள் குறித்து சிறப்பு டாக்டர்கள் விளக்குகின்றனர்.
முக்கிய அம்சமாக 18 நேரடி அறுவை சிகிச்சை விளக்கங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் நேரடியாக கவனித்து சந்தேகங்களை கேட்டு விளக்கம் பெற முடியும். இன்று சிறப்பு அமர்வுகள், கலந்துரை யாடல், ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிப்பு உள்ளிட்டவையும் நடக்கின்றன.
ஏற்பாட்டாளர்கள் கூறுகையில், 'தொழில் நுட்பத்தில் ஏற்படும் முன்னேற்றங்களை மருத்துவ பயன்பாட்டில் இணைப்பது, நோயாளிகளின் சிகிச்சை முடிவுகளை மேம்படுத்துவதே இப் பயிற்சியின் நோக்கமாகும்' என்றனர்.
நிர்வாக இயக்குநர் டாக்டர் ஹேமா, ஒருங்கிணைப்பு தலைவர் டாக்டர் சிவக்குமார், இணைத் தலைவர் பிரஹலாத் குமார் சிங்கி, செய லாளர்கள் அருள்பிரகாஷ், பிரதிக் எம். ரத்தோட் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட டாக்டர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
