ADDED : ஜன 17, 2026 05:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: பேரையூர் பகுதியில் கத்திரி சாகுபடி அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது. உற்பத்தி அதிகரிப்பால் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கடந்தாண்டு கத்திரிக்காய் விலை ஏற்றம் கண்டது. அதை அடுத்து பெரும்பாலான விவசாயிகள் கத்திரி பயிர் நடவுக்கு மாறினர். 3 மாதத்தில் பலன் தரும் கத்திரிச் செடியில் தொடர்ந்து ஐந்தாண்டு வரை காய் பிடிப்பு இருக்கும். தற்போது கத்திரி விளைச்சல் அதிகரித்துள்ளதால் விலை சரிவடைந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ கத்தரி ரூ. 30க்கு கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது கிலோ ரூ.5க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இது விவசாயிகளுக்கு கட்டுபடியான விலை இல்லை. கத்திரிக்காய் பறிப்பு கூலிக்கு கூட கிடைக்காது என விவசாயிகள் தெரிவித்தனர்.

