ADDED : ஜன 17, 2026 05:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: -: திருப்பரங்குன்றம் பகுதி கிராமப் பகுதிகளில் நெற்கதிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வைகை அணையில் திறக்கப்படும் தண்ணீர் திருப்பரங்குன்றம் கண்மாய்களுக்கு வரும். கடந்தாண்டு பெய்த தொடர் மழையால் பெரும்பாலான கண்மாய்கள் தாமதமாக நிரம்பின. கிணறுகள், ஆழ்குழாய்களில் தண்ணீர் இருந்த விவசாயிகள் நெல் நடவு செய்தனர். மானாவாரி பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள் கிணற்று நீரை நம்பி புரட்டாசி மாதம் நெல் நடவு செய்தனர்.
ஆரம்பத்தில் நடப்பட்ட நிலங்களில் சில நாட்களில் அறுவடை செய்ய உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மானாவாரி பகுதிகளிலும், கண்மாய்களில் தண்ணீர் இருப்பதாலும் அப்பகுதி விவசாயிகள் கோடை நடவு செய்ய இருப்பதாக தெரிவித்தனர்.

