ADDED : மார் 12, 2024 06:32 AM

அ நிறம் | அளவு
திருமங்கலம், : திருமங்கலம் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சிங்கப்பன் 80. ஒரு மகன், இரு மகள்கள் உள்ளனர்.
ஒரு மகள் மதுரை மருத்துவக் கல்லுாரி துணை முதல்வராக உள்ளார். சில நாட்களுக்கு முன்பு தனது உடலை மருத்துவ மாணவர்களுக்கு தானமாக கொடுக்க விரும்பி அதற்காக விண்ணப்பித்திருந்தார்.
நேற்று முன்தினம் இரவு உடல்நலக்குறைவால் இறந்தார். நேற்று மதுரை மருத்துவக் கல்லுாரி டீன் ரத்தினவேலிடம் உடல் வழங்கப்பட்டது.
