UPDATED : அக் 15, 2026 06:18 PM
ADDED : அக் 15, 2026 06:14 PM

அ நிறம் | அளவு
மதுரை: தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்த பரமசிவம் மனைவி லட்சுமி 66. இவர் அக். 11 ல் கீழே விழுந்து தலைக்காயமடைந்ததால் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டா்ர. அக். 14ல் மூளைச்சாவு அடைந்தார். மகன் ராஜேஷ்குமார் தாய் லட்சுமியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தார்.
இதையடுத்து லட்சுமியின் ஒரு சிறுநீரகம் திருச்சி எஸ்.ஆர்.எம்., மருத்துவக் கல்லுாரிக்கும், மற்றொரு சிறுநீரகம், கருவிழிகள் மதுரை அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கும் பொருத்தப்பட்டன. இதற்கு ஏற்பாடு செய்த மதுரை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், தேனி எஸ்.பி., பிரவீன் கவுதமுக்கு மருத்துவமனை டீன் அருள் சுந்தரேஷ்குமார் நன்றி தெரிவித்தார்.
