நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை ஜெய்ஹிந்துபுரம் அருகே மனநலம் பாதிக்கப்பட்டு ரோட்டில் திரிந்த 60 வயது முதியவரை மீட்டு தோப்பூர் அவசர சிகிச்சை மீட்பு மையத்தில் சேர்க்க துணைமேயர் நாகராஜன் உதவினார்.
இங்கு இதுவரை 220 பேர் சேர்க்கப்பட்டுள்ளதாக மாவட்ட மனநல மைய டாக்டர் சந்தோஷ்ராஜ் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், ''மீட்கும் போது அவசர சிகிச்சை உடனடியாக தேவைப்படுவோரை மதுரை அரசு மருத்துவமனைக்கும் நீண்டநாள் சிகிச்சை தருவதற்காக தோப்பூர் மையத்திற்கும் அனுப்புகிறோம். ஆதரவற்றோர் குறித்து 102 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவித்தால் மீட்டு சிகிச்சை அளிக்க முடியும்'' என்றார்.

