/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர் தேடல் குழுவிற்கான உறுப்பினர்கள் தேர்தல்; 10 நாட்களாகியும் மனுத்தாக்கல் இல்லை

ADDED : நவ 23, 2024 05:33 AM

மதுரை; மதுரை காமராஜ் பல்கலை புதிய துணைவேந்தர் தேடல் குழுவில் இடம் பெற வேண்டிய செனட், சிண்டிகேட் பிரதிநிதிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு 10 நாட்களாகியும் நேற்றுவரை ஒருவர் கூட மனுத்தாக்கல் செய்யவில்லை.
இப்பல்கலையில் துணைவேந்தர் பணியிடம் பல மாதங்களாக காலியாக உள்ளது. இந்நிலையில் தேடல் குழுவில் இடம் பெற வேண்டிய பல்கலை செனட், சிண்டிகேட் உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிப்பை பல்கலை நவ.,13ல் பதிவாளர் (பொறுப்பு) ராமகிருஷ்ணன் வெளியிட்டார்.
இதன்படி செனட் பிரதிநிதிக்கான தேர்தலில் போட்டியிடுவோர் டிச.,2,க்குள், சிண்டிகேட் பிரதிநிதிக்கு டிச., 3க்குள் மனுத்தாக்கல் செய்ய அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதன் பின் மனுக்கள் மீதான பரிசீலனை, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு போன்ற பணிகள் நடக்கும். ஒன்றுக்கு மேற்பட்டோர் போட்டியிடும்பட்சத்தில் முறையே டிச.,20, டிச.,23 ல் ஓட்டுப்பதிவு நடத்தப்படும். நவ.,13ல் இருந்து தற்போது வரை ஒருவர் கூட மனுத்தாக்கல் செய்யவில்லை.
சிக்கல் ஏற்படுமா
பல்கலை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தேடல் குழுவிற்கான செனட், சிண்டிகேட் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்ட பின் தேடல் குழு ஒருங்கிணைப்பாளரை (கன்வீனர்) கவர்னர் அறிவிப்பார். அதன் பின் புதிய துணைவேந்தரை தேர்வு செய்யும் மூன்று பேர் தேடல் குழு அரசிதழில் வெளியிடப்பட்டு, புதிய துணைவேந்தர் தேர்வு அறிவிப்பு வெளியாகும்.
இதற்கிடையே மூன்று பேர் தேடல் குழுவில் யு.ஜி.சி., பிரதிநிதியை நியமிக்க வேண்டும் என கவர்னர் ரவி கூறுகிறார். ஆனால் அதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால் தமிழகத்தில் துணைவேந்தர் தேடல் குழு அமைப்பதில் சிக்கல் நீடிப்பதால் மதுரை காமராஜ் உட்பட 5 பல்கலைகளில் துணைவேந்தர் பணியிடம் காலியாக உள்ள நிலையிலும் தேடல் குழு அமைக்கப்படவில்லை. இந்நிலையில் இப்பல்கலை தேடல் குழுவில் இடம் பெறுவதற்கான செனட், சிண்டிகேட் பிரதிநிதிக்கான தேர்தலை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது என்றார்.