/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
2026ல் நடப்பது தி.மு.க.,வுக்கும் பா.ஜ.,வுக்குமான தேர்தல்; ஹிந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் கணிப்பு
/
2026ல் நடப்பது தி.மு.க.,வுக்கும் பா.ஜ.,வுக்குமான தேர்தல்; ஹிந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் கணிப்பு
2026ல் நடப்பது தி.மு.க.,வுக்கும் பா.ஜ.,வுக்குமான தேர்தல்; ஹிந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் கணிப்பு
2026ல் நடப்பது தி.மு.க.,வுக்கும் பா.ஜ.,வுக்குமான தேர்தல்; ஹிந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் கணிப்பு
ADDED : நவ 13, 2024 06:32 AM
மதுரை : '2026ல் நடக்க உள்ள சட்டசபை தேர்தல் தி.மு.க.,வுக்கும், பா.ஜ.,வுக்குமானதாக இருக்கும்'' என்று ஹிந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் மதுரையில் கூறினார்.
அவர் கூறியதாவது: மற்றவர் கேலி, கிண்டலுக்கு ஆளாகியுள்ள பிராமணர் சமுதாயம் பாதுகாக்கப்பட வேண்டும். தமிழகத்தில் 70 ஆண்டுகளாக பிராமண சமுதாயத்தினர் ஒடுக்கப்பட்டவர்களாக மாறி விட்டனர். பிராமண சமுதாயத்தினரை பாதுகாக்க சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து சமுதாய தலைவர்களும் குரல் கொடுத்தனர்.
நடிகை கஸ்துாரி தெலுங்கு மக்களுக்கு எதிராக பேசிவிட்டார் என அவர் பேசியதை திரித்து, வெட்டி, ஒட்டி திராவிட சிந்தனை ஊடகங்கள் பரப்புகின்றன. தெலுங்கு, தமிழ் வேறு வேறான மொழிகள் இல்லை. எல்லாமே ஒரே தொப்புள் கொடி உறவு கொண்டவை.
அமரன் திரைப்படம் இந்திய தேசபக்தியில் நம் ராணுவத்தை உயர்த்திக்காட்டி இருக்கிறது. இதனை தயாரித்தது ராஜ்கமல் நிறுவனம். வெளியிட்டது உதயநிதியின் ரெட் ஜெயன்ட். படத்தின் மூலம் வந்த ரூ.300 கோடியை இந்திய ராணுவத்தினருக்கு வழங்க வேண்டும்.
பள்ளிகளில் மாணவர்களிடையே கஞ்சா, போதைப்பொருள் பழக்கம் அதிகம் உள்ளது. பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷை நீக்கி விட்டு, அவருக்குப்பதில் மூத்த அமைச்சரை நியமிக்கலாம்.
தமிழக வெற்றி கழகம் கட்சி பா.ஜ., தலைவர் அண்ணாமலை போல தி.மு.க., ஊழலை அம்பலப்படுத்த போவதாக அறிவித்து உள்ளது. அதனை வரவேற்கிறோம்.
வரும் சட்டசபை தேர்தலில் ஐந்து முனைப்போட்டி இருக்கும். தி.மு.க.,வை அ.தி.மு.க., த.வெ.க., நாம் தமிழர் என எந்தக் கட்சியாலும் வெல்ல முடியாது. இத்தேர்தல் தி.மு.க.,வுக்கும், பா.ஜ.,வுக்குமானதாக இருக்கும். காமராஜருக்குப் பின் ஆண்ட திராவிட கட்சிகளில் சிறந்த முதல்வர் பழனிசாமி தான் என்றார்.
தி.மு.க., அரசு ஆன்மிக அரசு அல்ல
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் ஹிந்து மக்கள் கட்சி, தமிழக ஹிந்து துறவிகள் பேரவை, அகில இந்திய சன்னியாசிகள் சங்கம் சார்பில் முத்துராமலிங்கத்தேவருக்கு சனாதன ஹிந்து தர்ம தமிழ் முறைப்படி நட்சத்திர குருபூஜை நடந்தது. ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
பின் அவர் கூறியதாவது: தி.மு.க., அரசு ஆன்மிக அரசு அல்ல. தி.மு.க.,வினர் ஹிந்து விரோதிகள் அல்ல என்று ஒரு பக்கம் முதல்வர் ஸ்டாலின் கூறி வருகிறார். துணை முதல்வர் உதயநிதி கம்யூ., திராவிட கழகத்துடன் சேர்ந்து சனாதனத்தை கொசு, டெங்கு போல ஒழிப்போம் என்கிறார்.
தாங்கள் அதிக கோயில்களுக்கு கும்பாபிஷேகம் செய்தோம் என்று அறநிலையத்துறை அமைச்சர் கூறுகிறார். பக்தர்கள் உபயம், நன்கொடை மூலமாகத் தான் அது நடக்கிறது. கோயில் கும்பாபிஷேகத்திற்கு அறநிலையத்துறை நிதி ஒதுக்குவதில்லை. அனுமதி மட்டும் தான் வழங்குகிறது என்றார்.

