/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இயந்திரங்கள் மோதி சாய்ந்த மின்கம்பங்கள்
/
இயந்திரங்கள் மோதி சாய்ந்த மின்கம்பங்கள்
ADDED : செப் 02, 2025 03:34 AM
திருமங்கலம் : திருமங்கலம் விமான நிலைய ரோட்டில் ஓராண்டுக்கு மேலாக ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடக்கிறது.
இந்நிலையில் காமராஜர்புரம் வேளாண் அலுவலகம் அருகே நேற்று பாலம் பணிகளுக்காக வாருகால் பள்ளம் தோண்டும் பணியில் மண்அள்ளும் இயந்திரம் ஈடுபட்டிருந்தது.
இந்தப் பகுதியில் மின்கம்பம் அருகே பள்ளம் தோண்டிய போது எதிர்பாராத விதமாக இரண்டு மின்கம்பங்கள் ரோட்டில் சாய்ந்தன.
இதனால் மின் கம்பிகள் நடுரோட்டில் விழுந்தன. கம்பங்கள் விழும்போதே 'டிரிப்' ஆகி மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
போக்குவரத்து நிறுத்தப்பட்டு வாகனங்கள் மாற்றுப்பாதையில் அனுப்பப்பட்டன.
ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. காமராஜர்புரம், கற்பகநகர் பகுதிகளில் இரண்டு மணி நேரம் மின் தடை ஏற்பட்டது.
மின்வாரிய அதிகாரிகள் உடனே மீட்பு பணியில் ஈடுபட்டு மாற்று ஏற்பாடு மூலம் மின் இணைப்பு வழங்கினர். மாலையில் மின் இணைப்பு சீரமைக்கப்பட்டது.