/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மின்சாதனம், சோலார் எனர்ஜி தொழிற் பயிற்சி
/
மின்சாதனம், சோலார் எனர்ஜி தொழிற் பயிற்சி
ADDED : ஜூலை 19, 2025 03:05 AM
மதுரை: மதுரை புதுார் தொழிற்பேட்டை எம்.எஸ்.எம்.இ., தொழில்நுட்ப மேம்பாட்டு விரிவாக்க மையம் சார்பில் 10ம் வகுப்பு, பிளஸ் 2 முடித்தவர்களுக்குதொழிற் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
ஜூலை 18 முதல் 29 வரை வீட்டு உபயோக மின்சாதன பொருட்களை சர்வீஸ் செய்யும் பயிற்சி அளிக்கப்படுகிறது. 10ம் வகுப்பு முடித்த இருபாலர் சேரலாம். ஜூலை 26, 27ல் தொழில்முனைவோருக்கான சோலார் எனர்ஜி குறித்து காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை பயிற்சி வழங்கப்படும். பிளஸ் 2 படித்த இருபாலர் சேரலாம்.
மேற்கண்ட இரு பயிற்சிகளுக்கும் ஜி.எஸ்.டி உள்பட ரூ.3540 கட்டணம். 18 வயது நிரம்பிய விருப்பம் உள்ளவர்கள் பாஸ்போர்ட் போட்டோ, ஆதார் நகல், கல்வி சான்றிதழ் நகல், எஸ்.டி., எஸ்.சி., வகுப்பினராக இருந்தால் ஜாதி சான்றிதழ் ஆகியவற்றுடன் நேரில் பதிவு செய்ய வேண்டும்.
விவரங்களுக்கு 86956 46417ல் தொடர்பு கொள்ளலாம்.