ADDED : ஆக 01, 2025 02:15 AM
மதுரை: மதுரை நகர் மின்வாரியம் மேற்கு கோட்டம் விளாங்குடி பிரிவில் உள்ள பகுதிகள், நகர் வடக்கு பிரிவுக்கு மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விளாங்குடி பிரிவில் 004 வி.எம்.டபிள்யூ.காலனி, விசாலாட்சி காலனி, செந்தாமரை கார்டன், விஸ்தாரா அபார்ட்மென்ட், பரவை டோல்கேட் பகுதிகள் 027 விஸ்தாரா என்ற பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளன. இதேபோல (011) விளாங்குடி பிரிவு 028 என்றும், (012) பாரதியார் நகர் பிரிவு 029 என்றும், (013) சொக்கநாதபுரம் பிரிவு 030 என்றும், (014) கணபதி நகர் பிரிவு 031 என்றும், (015) நேதாஜி மெயின்ரோடு பிரிவு 032 என்றும், (016) ராமமூர்த்தி நகர் பிரிவு 033 என்றும், (018) பரவை மார்க்கெட் பிரிவு 034 என்றும் மாற்றப்பட்டுள்ளது. இப்பகுதி மின்நுகர்வோர் தங்கள் குறைகளுக்கு வடக்கு மின்பிரிவு அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும் என செயற்பொறியாளர் லதா தெரிவித்துள்ளார்.