ADDED : ஏப் 02, 2025 03:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை மின்பகிர்மான வடக்கு கோட்டம் சார்பில் மின்நுகர்வோருக்கான குறைதீர் கூட்டம் ரேஸ்கோர்ஸ் அருகே உள்ள செயற் பொறியாளர் அலுவலகத்தில் நாளை (ஏப்.3) காலை 11:00 முதல் மதியம் 1:00 மணி வரை நடக்க உள்ளது.
இக்கோட்டத்தில் உள்ள தமுக்கம், ரேஸ்கோர்ஸ், செல்லுார், தாகூர்நகர், சொக்கிக்குளம், திருப்பாலை, ஆனையூர், ஆத்திக்குளம், அண்ணாநகர், கே.கே.நகர், புதுார், மேலமடை பகுதி மின்நுகர்வோர் தங்கள் குறைகளை நேரில் தெரிவித்து தீர்வு காணலாம் என செயற்பொறியாளர் ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.