ADDED : டிச 11, 2025 05:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை மின்வாரிய கிழக்கு கோட்டத்தைச் சேர்ந்த மின்நுகர்வோர் களுக்கான குறைதீர் கூட்டம், மேற்பார்வையாளர் தலைமையில் இன்று (டிச.11) காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை மேலுார் உதவிப் பொறியாளர் அலுவலகத்தில் நடக்க உள்ளது.
இதில் அப்பகுதி மின்நுகர்வோர் பங்கேற்று குறைகளை நேரில் மனுவாக கொடுத்து தீர்வு பெறலாம் என, மேற்பார்வை பொறியாளர் பத்மாவதி தெரிவித்துள்ளார்.

