/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பைபாஸ் ரோடு போடி ரயில்வே லைன் பகுதியில் அடுத்த பாலம்: கூடுதல் பாலமாக அமைவதால் நெரிசல் குறையும்
/
பைபாஸ் ரோடு போடி ரயில்வே லைன் பகுதியில் அடுத்த பாலம்: கூடுதல் பாலமாக அமைவதால் நெரிசல் குறையும்
பைபாஸ் ரோடு போடி ரயில்வே லைன் பகுதியில் அடுத்த பாலம்: கூடுதல் பாலமாக அமைவதால் நெரிசல் குறையும்
பைபாஸ் ரோடு போடி ரயில்வே லைன் பகுதியில் அடுத்த பாலம்: கூடுதல் பாலமாக அமைவதால் நெரிசல் குறையும்
ADDED : டிச 11, 2025 05:18 AM

மதுரை: மதுரை பைபாஸ் ரோடு போடி ரயில்வே லைன் பாலத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க அதன் அருகிலேயே புதிய பாலம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. மதுரை நகரின் நெரிசலை தீர்க்க 40 ஆண்டுகளுக்கு முன் பழங்காநத்தம் முதல் பாத்திமா கல்லுாரி வரை 4 கி.மீ., தொலைவுக்கு பைபாஸ் ரோடு அமைக்கப்பட்டது. இதனால் நகரை கடந்து சென்ற கனரக வாகனங்கள் எளிதாக சென்றன. தற்போது நகரின் விரிவாக்கத்தால் இந்த ரோடு நகருக்குள் வந்துவிட்டது.
ரோட்டின் இருபுறமும் ஏராளமான குடியிருப்புகள், பெரிய நிறுவனங்களின் கடைகள் அதிகரித்துவிட்டதால் பைபாஸ் ரோடு தற்போது போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது. அக்காலத்திலேயே 6 வழிச்சாலை போல அகலமாக உள்ளது. பைபாஸ் ரோடு இருபுறமும் தலா 18 மீட்டர் அகலம், அதைத்தாண்டி சர்வீஸ் ரோடு என அமைக்கப்பட்டதால் இன்றுவரை கடும் நெரிசலிலும் தாக்குப்பிடித்து வருகிறது.
இந்த ரோட்டில் பழங்காநத்தம் அருகே போடி ரயில்வே லைன் குறுக்கிடுகிறது. இதில் உள்ள ரயில்வே பாலம் மொத்தமே 11 மீட்டர் அகலமே உள்ளது. இதன் நீளம் 500 மீட்டர். பல ஆண்டுகளை கடந்து விட்டதால் பாலம் பழமையாகிவிட்டது.
ஆறுவழிச்சாலையில் இப்பாலம் இருவழிச்சாலையாக உள்ளதால், பைபாஸ் ரோட்டில் 'பறந்து' வரும் வாகனங்கள் இதனருகே வந்ததும் முடங்கி விடுகின்றன. விபத்தும் அடிக்கடி நடக்கின்றன. 'பீக்அவர்' நேரங்களில் அதிக வாகனங்களால் ஊர்ந்து செல்கின்றன.
சமீப நாட்களாக இந்த இடத்தில் வாகன நெரிசல் அதிகமாகி வருகிறது. இதனால் பாலத்தில் தேங்கும் வாகனங்கள் அதை கடக்க சிரமப்படுகின்றன. இப்பாலத்தின் மேற்கு பகுதியில் நேரு நகர் செல்வதற்கு பாலத்தின் வடபுறம் 'கிராஸ்' செய்கின்றனர். இதனால் வாகனங்கள் நின்று, நிதானித்து செல்கின்றன.
அவ்வப்போது கைப்பிடிச் சுவர் போன்றவற்றை சீரமைப்பரே தவிர பாலத்திற்கு விமோசனம் கிடைக்கவில்லை.
அரசு ஒப்புதல் பழமையான இந்த ரயில்வே பாலத்தை அப்புறப்படுத்தி புதிய பாலம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறையில் விசாரித்தபோது, ''பழமையான பாலம் என்றாலும் பலமாகத்தான் இருக்கிறது. அதேசமயம் நெரிசலை தவிர்க்க அருகிலேயே கூடுதலாக ஒரு பாலம் கட்ட அரசுக்கு கருத்துரு அனுப்பி ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது. விரைவில் மதிப்பீடு தயார் செய்து பாலம் கட்டப்பட உள்ளது. அப்போது ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்'' என்றனர்.

