ADDED : ஜூன் 15, 2025 05:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை கோமதிபுரம் தென்றல் நகர் குடியிருப்போர் சங்கம் சார்பில் வீடுகளில் மக்கா குப்பை, மின்னணு கழிவுகள் சேகரிக்கப்பட்டன.
குப்பையை தரம் பிரித்து, மறுசுழற்சி செய்து வரும் பி.பி.குளம் தன்னார்வலர்மகாமாயனிடம் 200 கிலோ மக்கா குப்பை, மாவட்ட யங் இந்தியா அமைப்பினரிடம் 100 கிலோ மின்னணு கழிவுகள் வழங்கப்பட்டன. நிர்வாகிகள் ராகவன், பழனிக்குமார், திரவியம், சங்கர், ரகுபதி, காளிமுத்து, நரசிம்மராஜ் ஆகியோர் ஏற்பாடுகளை செய்தனர்.