ADDED : ஆக 25, 2026 04:21 PM
அ நிறம் | அளவு
பெருங்குடி: மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரி விலங்கியல் துறை சார்பில் உலக யானைகள் தின விழா கொண்டாடப்பட்டது.
முதல்வர் சந்திரன் தலைமை வகித்து, யானைகள் பல்லுயிர் பெருக்கம் மற்றும் சுற்றுப்புற சூழல் என்ற தலைப்பில் பேசினார். விலங்கியல் துறைத் தலைவர் விஜயகுமார் வரவேற்றார். பேராசிரியர் அசாருதீன் முன்னிலை வகித்தார். ’’என் யானை என் பாரம்பரியம்’’ என்ற தலைப்பில் நடந்த கட்டுரை போட்டியில் மாணவர்கள் அபிஷேக் முத்துப்பாண்டி வெற்றி பெற்றனர். அவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
