/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தென்னை மரங்களை சேதப்படுத்திய யானைகள் குருத்துகளை மட்டும் சாப்பிட்டு 'குறும்பு'
/
தென்னை மரங்களை சேதப்படுத்திய யானைகள் குருத்துகளை மட்டும் சாப்பிட்டு 'குறும்பு'
தென்னை மரங்களை சேதப்படுத்திய யானைகள் குருத்துகளை மட்டும் சாப்பிட்டு 'குறும்பு'
தென்னை மரங்களை சேதப்படுத்திய யானைகள் குருத்துகளை மட்டும் சாப்பிட்டு 'குறும்பு'
ADDED : ஜூலை 15, 2025 03:57 AM

எழுமலை: எழுமலை அருகே மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரின் அடிவாரத்தில் முகாமிட்டுள்ள யானைக் கூட்டத்தால் 300க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் சேதமடைந்தன. குருத்துகளை மட்டும் சாப்பிட்டு விட்டு செல்லும் கூட்டத்தை வனப்பகுதிக்கு திருப்ப வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உசிலம்பட்டியில் இருந்து செட்டியபட்டி, நல்லுத்தேவன்பட்டி, வாசிமலை, சதுரகிரி மலைத்தொடர் என மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடர் எழுமலையின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ளது. கம்பம் பள்ளத்தாக்கு சுருளிமலைப்பகுதியில் உள்ள யானைகள் கூட்டம் அவ்வப்போது, உணவு, இரைதேடி இப்பகுதியில் முகாமிடும்.
செட்டியபட்டி, முத்துப்பாண்டிபட்டி, வாசிநகர், மொக்கத்தான்பாறை உள்ளிட்ட மலையடிவாரப் பகுதிகளுக்கு வந்து செல்கின்றன. சில நாட்களாக சதுரகிரி மலைத்தொடரில் வாழைத்தோப்பு, மொக்கத்தான்பாறைக்கு இடையில் உள்ள கோட்டைமலைப்பகுதியில் முகாமிட்டுள்ளன.
இரவில் மலையடிவாரத்தில் வளர்க்கப்பட்டுள்ள தென்னை மரங்களின் குருத்துக்களை மட்டும் சாப்பிட்டு விட்டுச் செல்வதால் 300க்கும் மேற்பட்ட மரங்கள் சேதமடைந்துள்ளன.
இழப்பீடு தேவை
முத்தையா 40, டி.கிருஷ்ணாபுரம்: கோட்டைமலையடிவாரத்தில் 9 ஏக்கர் பரப்பளவில் 900 மரக்கன்றுகளை 4 ஆண்டுகளாக பராமரித்து வருகிறேன். தற்போது பாளை விடுமளவில் வளர்ந்துள்ளன. அடிவாரத்திற்கு அருகில் உள்ள 300க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை யானைகள் சேதப்படுத்தியுள்ளன.
வனத்துறையினர் பார்வையிட்டு சேதமடைந்துள்ள தென்னை மரங்களை கணக்கிட்டு சென்றுள்ளனர். யானைகளை வனப்பகுதிக்குள் திருப்பவும், சேதமடைந்த தென்னைமரங்களுக்கு இழப்பீடு வழங்கவும் வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம் என்றார்.

