ADDED : பிப் 21, 2025 05:47 AM
மதுரை: மதுரையில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லுாரி ஆசிரியர்கள் சங்க மதுரை கிளையின் மாதாந்திர பொதுக்குழுக் கூட்டம் பொருளாளர் பெருமாள் தலைமையில் நடந்தது.
பேராசிரியர் ஆனந்தன் வரவேற்றார். செயல் அறிக்கையை செயலாளர் பெரியதம்பி வாசித்தார். சங்கத் தலைவர் ராமமூர்த்தி, பேராசிரியர் குணவதி உட்பட பலர் பங்கேற்று பேசினர்.
தமிழக அரசின் இருமொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்வது, புதிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் கல்வி நிதி தரப்படும் எனக்கூறும் மத்திய அரசை கண்டிப்பது, மதுரையின் டங்ஸ்டன் கனிம சுரங்க பிரச்னையில் வென்ற மக்களை பாராட்டுவது, மதுரை காமராஜ் பல்கலையில் ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு 3 மாத சம்பளத்தை உடனே வழங்க வலியுறுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பேராசிரியர்கள் சண்முகசுந்தரம், ஜெகநாதன், சந்திரன், சுப்ரமணி, செந்தில் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

