UPDATED : நவ 16, 2026 05:57 PM
ADDED : நவ 16, 2026 05:54 PM
உசிலம்பட்டி: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட 45 அம்ச கோரிக்கைகளை வென்றெடுக்க டிச. 4ல், தமிழக முதல்வரை சந்தித்து முறையிட உள்ளனர். இதற்காக ஊழியர் சந்திப்பு பிரசார இயக்கம் நவ. 16 முதல் 27 வரை 11 முனைகளில் இருந்து துவங்கியது.
இதில் ஒரு பகுதி உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துவங்கியது. இதில் மாநிலச் செயலாளர் நீதிராஜா, மாவட்ட தலைவர் தமிழ், செயலாளர் சந்திரபோஸ், பொருளாளர் பரமசிவன் பங்கேற்றனர். பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி பணிக்காலமாக அறிவிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளுடன் நோட்டீஸ்களை அரசு அலுவலகங்களில் வினியோகித்து பிரசாரம் செய்தனர்.
