/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சத்துணவு ஊழியர்கள் நியமனத்தில் ஊதிய முரண்பாடு ஏன் ஊழியர் சங்கம் கேள்வி
/
சத்துணவு ஊழியர்கள் நியமனத்தில் ஊதிய முரண்பாடு ஏன் ஊழியர் சங்கம் கேள்வி
சத்துணவு ஊழியர்கள் நியமனத்தில் ஊதிய முரண்பாடு ஏன் ஊழியர் சங்கம் கேள்வி
சத்துணவு ஊழியர்கள் நியமனத்தில் ஊதிய முரண்பாடு ஏன் ஊழியர் சங்கம் கேள்வி
ADDED : மார் 21, 2025 04:11 AM

மதுரை: சத்துணவு, அங்கன்வாடி மையங்களில் ஊழியர்கள் நியமனம் செய்யும்போது, ஊதிய நிர்ணயத்தில் முரண்பாடு உள்ளதாக சத்துணவு ஊழியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தமிழ்நாடு சமூகநலத்துறையில் சத்துணவுத் திட்டம் செயல்படுகிறது. இதில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இத்திட்டத்தில் சமையல் உதவியாளர்கள் 8997 பேரை, மாதம் ரூ.3 ஆயிரம்தொகுப்பூதியத்தில் நியமிக்க அரசு உத்தரவிட்டுஉள்ளது.
இதேபோல அங்கன்வாடி மையங்களுக்கும் 7783 ஊழியர்களை நியமனம் செய்யவும் கடந்த மார்ச் 12ல் அரசு உத்தரவிட்டுள்ளது.
இவர்களில் நிலை 2 ஊழியர்களுக்கு (3592 பேர்) ரூ.4100 சம்பளம், நிலை 3 ஊழியர்களுக்கு (305 பேர்) ரூ.5700 சம்பளம், நிலை 4 ஊழியர்களுக்கு (3886 பேர்) ரூ.7700 சம்பளத்தை சிறப்பு காலமுறை ஊதியமாக வழங்க உத்தரவிட்டுள்ளனர். இதனால் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் நியமனத்தில் பாரபட்சம் இருப்பதாக சர்ச்சை எழுந்துஉள்ளது.
ஊதிய முரண்பாடு ஏன்
சத்துணவு ஊழியர்கள்சங்க மாநில பொதுச் செயலாளர் நுார்ஜஹான் கூறியதாவது:
சத்துணவுத் திட்டத்தில் பல ஆயிரம் காலியிடங்கள் இருந்தாலும் 8 ஆயிரம் பேரை தொகுப்பூதியத்தில் நியமிக்க உள்ளனர். ஓராண்டுக்கு பின்பு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்குவதாக அறிவித்துள்ளனர். ஆனால் அங்கன்வாடி மையங்களில் நேரடியாக சிறப்பு காலமுறை ஊதியத்திலேயே நியமிக்க உத்தரவிட்டுள்ளனர். சம்பளவிவகாரத்தில் ஏன் இந்த பாரபட்சம்.
2021ல் அ.தி.மு.க., ஆட்சியின் போது சத்துணவு ஊழியர்களை சிறப்பு காலமுறை ஊதியத்திலேயே நியமிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். அதன்பின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. எனவே இப்போது நியமனத்திற்கும் சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்றார்.