நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்ற : மதுரை சவுராஷ்டிரா கல்லுாரியில் இன்டகிரேட்டட் என்டர்பிரைசஸ் இந்தியா நிறுவனம் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. கல்லூரி செயலாளர் குமரேஷ் தலைமை வகித்தார். நிர்வாக குழு உறுப்பினர் வெங்கடேஸ்வரன் அறிமுக உரையாற்றினர்.
முதல்வர் ஸ்ரீனிவாசன் துவக்கி வைத்தார். கல்லூரி வேலைவாய்ப்பு அலுவலர் ஜெயந்தி வரவேற்றார். நிறுவனத்தின் துணைத் தலைவர் தன்ராஜ், மனிதவள மேலாளர்கள் சந்தானகிருஷ்ணன், திவ்யா, பாலாஜி முன்னிலையில் நேர்முகத் தேர்வு நடந்தது. 28 மாணவர்கள் தேர்வு பெற்றனர். கல்லுாரி வேலைவாய்ப்பு குழு உறுப்பினர்கள் ராஜசபரிஸ், சின்னத்துரை, கணேசன், கார்த்திக், செந்தில், கவிதா, காஞ்சனா, புவனேஸ்வரி ஏற்பாடுகள் செய்தனர்.

