ADDED : டிச 27, 2024 05:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை மடீட்சியாவில் அனைத்து ரோட்டரி சங்கங்கள் மற்றும் மடீட்சியா சார்பில் நாளை(டிச.28) காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.
நிகழ்ச்சி தலைவர்கள் கோபிசன், சிவசங்கர், தாஸ்குமார் கூறுகையில்,''இம்முகாமில் அனைத்து தொழில் நிறுவனங்கள் பங்கேற்று, 500க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை வழங்க உள்ளன. முகாமிலேயே நேர்முக தேர்வு நடத்தி தேர்வு செய்யப்பட்டோருக்கு நியமன ஆணை வழங்கப்படும். ஏற்பாடுகளை மாவட்ட ஆளுநர் ராஜா கோவிந்தசாமி ஆலோசனைபடி நடந்து வருகிறது'' என்றனர்.