நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: மதுரை சவுராஷ்டிரா கல்லுாரியில் தமிழக அரசின் சார்பில் தமிழ்நாட்டில் பணியாற்றும் வெளி மாநில தொழிலாளர்களின் தகவல்களை சேகரிப்பதற்காக விரிவான கணக்கெடுப்பு திட்டத்தை செயல்படுத்த லான்ச் பேட் இன்டர்ஷிப் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.
செயலாளர் குமரேஷ் தலைமை வகித்தார். முதல்வர் ஸ்ரீனிவாசன், நிர்வாக குழு உறுப்பினர் வெங்கடேசன் பேசினர். கல்லுாரி வேலைவாய்ப்பு அதிகாரி ஜெயந்தி வரவேற்றார். 375க்கும் மேலான மாணவர்கள் நேர்காணலில் பங்கேற்றனர். அவர்களில் 115 மாணவர்கள் தேர்வாகினர். கல்லுாரி வேலை வாய்ப்பு துறை உறுப்பினர்கள் கவிதா, ராஜசபரீஷ், புவனேஸ்வரி, கார்த்திக், காஞ்சனா, சின்னத்துரை, கணேசன் ஏற்பாடு செய்தனர்.

