/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாற்றுத் திறனாளிகளுக்கு இன்று வேலைவாய்ப்பு
/
மாற்றுத் திறனாளிகளுக்கு இன்று வேலைவாய்ப்பு
ADDED : அக் 09, 2024 04:26 AM
மதுரை : மதுரை அமெரிக்கன் கல்லுாரியில் மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு முகாம் இன்று (அக்.9) காலை 10:00 மணி முதல் நடக்கிறது.
மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்த முகாம் நடக்கிறது. இதையொட்டி மாற்றுத் திறனாளிகளுக்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இம்முகாமில் வேலைவாய்ப்பு வழங்கவும், வேலைவாய்ப்பு பயிற்சி அளிப்பதற்கு 70 க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன.
இதில் பங்கேற்க வரும் மாற்றுத் திறனாளிகள், கோரிப்பாளையத்தில் இருந்து அண்ணா பஸ்ஸ்டாண்ட் செல்லும் ரோட்டில் உள்ள அமெரிக்கன் கல்லுாரி நுழைவு வாயில் வழியாக வரவேண்டும்.
அவர்களை அழைத்துச் செல்ல சக்கர
நாற்காலிகள், ஆம்னி வாகனங்களுக்கும், இடைவேளையின்போது டீ, பிஸ்கட்ஸ் வழங்கவும், மதிய உணவுக்கும் ஏற்பாடு செய்துள்ளனர்.
மாற்றுத்திறனாளிகளுடன் ஒருவர் உதவிக்கும் வரலாம்.
இதற்கான ஏற்பாடுகளை கலெக்டர் சங்கீதா, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சாமிநாதன், தொழில் நெறி வழகாட்டி அலுவலர் வெங்கடசுப்ரமணியன் செய்து வருகின்றனர்.