ADDED : ஆக 13, 2025 02:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி சமூக பணித்துறை மற்றும் ப்ராஜெக்ட் புத்ரி சார்பில் 'வேலை வாய்ப்பு திருவிழா 2025' என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு கருத்தரங்கு நடந்தது. 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். கல்லுாரி செயலாளர் ஸ்ரீதர் தலைமை வகித்தார்.
முதல்வர் ராமசுப்பையா தலைமை வகித்தார். மாநகராட்சி கமிஷனர் சித்ரா, எச்.சி.எல். டெக்னாலஜிஸ் மூத்த மேலாளர் பாலசுப்ரமணியன், அவ்தார் ஹூயூமன் கேப்பிட்டல் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் சவுந்தர்யா ராஜேஷ், சோஹோ கார்ப்பரேஷன் பி.லிட்., அப்ரார் அகமத் ஆகியோர் வேலை வாய்ப்புகள், ஆரம்பகட்ட திட்டமிடல், கல்வி திறன்கள், மென் திறன்கள் அவசியம் குறித்து விளக்கினர்.
பல்வேறு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர்.