ADDED : ஜன 31, 2024 07:05 AM
மேலுார் : கிடாரிப்பட்டி லதாமாதவன் கல்வி நிறுவனத்தில் பிப்.,2 ல் லதாமாதவன் கல்லுாரி மற்றும் சென்னை பவுனா கல்வி திறன் பயிற்சி ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில் இலவச வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. கல்லுாரி சேர்மன் மாதவன் தலைமை வகிக்கிறார். அறக்கட்டளை சேர்மன் அய்யாக்கண்ணு முன்னிலை வகிக்கிறார்.
10,12ம் வகுப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ., பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற, பெறாத மாணவர்களுக்கு 2 ஆண்டுகள் பயிற்சியளித்து நிறுவனத்தில் தேவைக்கேற்ப வேலை வழங்கப்படும். கல்வி தகுதிக்கேற்ப மாதம் ரூ.14,500 முதல் உதவித்தொகையும், ஊக்கத் தொகையாக ரூ 1050ம் வழங்கப்படும்.
கல்வி சான்றிதழ், ஆதார் கார்டு, மூன்று பாஸ்போர்ட் போட்டோ உள்ளிட்டவற்றுடன் முகாமில் பங்கேற்கலாம். மேலும் விபரங்களுக்கு வேலை வாய்ப்பு அலுவலர் டீன் ஹேமலதாவை 97888 69822ல் தொடர்பு கொள்ளலாம்.