ADDED : டிச 09, 2025 07:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை உத்தங்குடி வண்ணப்பன், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: உத்தங்குடியில் சிறுவர் பூங்கா உள்ளது.
இதில் சிலர் மாடுகளை கட்டி வைத்து, வாகனங்களை நிறுத்தி ஆக்கிரமித்துள்ளனர். அவற்றை அகற்ற வலியுறுத்தி கலெக்டர், மாநகராட்சி கமிஷனருக்கு புகார் அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் நாகேந்திரன் ஆஜரானார்.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: ஆக்கிரமிப்பை அகற்ற மேற்கொண்ட நடவடிக்கை குறித்து ஜன.5ல் அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றனர்.

