/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மார்ச் 24 முதல் வேலை நிறுத்தம் கூட்டுறவு டாக்பியா அமைப்பு முடிவு
/
மார்ச் 24 முதல் வேலை நிறுத்தம் கூட்டுறவு டாக்பியா அமைப்பு முடிவு
மார்ச் 24 முதல் வேலை நிறுத்தம் கூட்டுறவு டாக்பியா அமைப்பு முடிவு
மார்ச் 24 முதல் வேலை நிறுத்தம் கூட்டுறவு டாக்பியா அமைப்பு முடிவு
ADDED : மார் 17, 2024 12:59 AM
மதுரை: கூட்டுறவு சங்கங்களுக்கு நஷ்டம் ஏற்படுத்தும் வகையில் லாரி, டிராக்டர் வாங்கச் சொல்வதை கைவிட வேண்டும் உட்பட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 24 முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கம் (டாக்பியா) முடிவு செய்தது.
மதுரையில் நடந்த மண்டல ஆயத்த கூட்டத்தில் மாநில கவுரவ செயலாளர் குப்புசாமி தலைமை வகித்தார். மாவட்ட கவுரவ செயலாளர் ஆசிரிய தேவன் கூறியதாவது: கார்டுதாரர்களின் கைரேகையை பதிவு செய்வதற்காக ரேஷன் கடை பெண் பணியாளர்களை மாலை 6:00 மணிக்கு மேல் வேலை வாங்குகின்றனர். பொருட்களை கட்டாயப்படுத்தி விற்கக்கூடாது என அரசு அறிவித்திருத்தாலும் சந்தையில் விலை போகாத சோப்பு, ஷாம்பூ போன்ற பொருட்களை கார்டுதாரர்களிடம் விற்கச் சொல்லி அதிகாரிகள் கட்டாயப்படுத்துகின்றனர்.
நகைக் கடன் ஏலத்தில் ஏற்பட்ட ஏல இழப்பீடு தொகைக்கு செயலாளர்களின் ஓய்வுக்கால பலன்களை நிறுத்தி வைக்கின்றனர். 24 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துகிறோம் என்றார்.